இராஜராஜன் அடிமைகளைக் கொண்டு பெரிய கோவிலை கட்டினாரா? தேவரடியார் முறையைக் கொண்டுவந்தாரா? பிராமண ஆதரவாளராக இருந்தாரா? இராஜராஜன் ஒரு போர் வெறியரா? மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினாரா? தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தாரா? கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினாரா? என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா? - என்பது போன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வ மறுப்பைத் தரும் நூல்.
உலகில் முதன் முதலாக மழைநீர் சேகரிப்பை செயல்படுத்தியவர், உலகில் நிலத்தின் பண்பை அடிப்படையாக வைத்து நில அளவை செய்த முதல் அரசர், கோவில்களில் அம்மனுக்கு சந்நிதி வைக்கும் மரபைத் தொடங்கியவர், தன்னிடம் தோற்ற அரசர்களின் மரியாதையில் ஒருபோதும் கை வைக்காதவர் - என இராஜராஜனின் சிறப்புகளை ஆதாரங்களோடு விளக்கும் முதல் நூல்.
பெரிய கோவிலின் கோபுர நிழல் கீழே விழாதா? கோபுரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லா? பெரிய கோவில் நந்தி வளர்கிறதா? ஆதித்த கரிகாலனை இராஜராஜன் கொன்றாரா? - என்பவை போன்ற பிரபல சர்ச்சைகளின் முற்றுப்புள்ளி...
தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் உலா வருகின்றன. தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது!
எது உண்மை? எது பொய்? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது.
இரா.மன்னர் மன்னன் அவர்கள் எழுதிய 'இராஜராஜ சோழன்' - இன்றைய பொய்களும்... நேற்றைய வரலாறும்...
Comments