அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது. -ஆஷிஷ் நந்தி அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார். - வி.எஸ்.நய்பால் அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை. - சஷி தரூர்
top of page
bottom of page
Comments