வரலாற்றில் சோழர்கள் மீது சுமத்தப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகவும் ஆதாரம் திரிக்கப்பட்டவையாகவுமே உள்ளன. அவற்றின் ஒரு சோற்றுப் பதம்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய குற்றச்சாட்டுகள்.
தமிழக வரலாற்றில் முழுதும் மறைக்கப்பட்ட ஒரு பெரும் யுத்தத்தின் அடக்க முடியாத சத்தமே சோழ அரசர் ஆதித்த கரிகாலனின் கொலை ஆகும். அந்த கொலையின் பின்னணியை செப்பேடு, கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு மிக விரிவான முறையில் ஆராய்கிறது இந்த நூல். அத்தோடு தமிழக வரலாற்றின் மூலங்களாகக் கருதப்படும் ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவை குறித்து மிக விரிவாக விளக்கும் முதல் நூலும் இதுவாகும்.
Comments